பாகிஸ்தானின் பிரச்சினைக்குரிய பிரதேசங்களாக கருதப்படும் ஹிபர் பக்ட்டுன்க்வா ((Mhyber Pakhtunkhwa) பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது இலங்கையர் ஒருவர் உட்பட்ட 118 சட்டவிரோத குடியேறிகள் கைதுசெய்யப்பட்டனர்.பாகிஸ்தான் ஊடகம் ஒன்றை கோடிட்டு இந்திய செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பெண் பொலிஸார் உட்பட்ட சுமார் 700 பொலிஸார் நேற்று அதிகாலை கையாடாபாத் பகுதியில் இந்த சோதனையை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 118 பேரும் தாம் தங்கியிருந்தமைக்கான தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று பாகிஸ்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக