வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை பொது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் திட்டமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனநாயக மக்கள் முன்னணியும் கட்சியும் அறிவித்துள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நியமிப்பது குறித்து யோசிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு பல்வேறு தேவைகள் இருப்பதாகவும், அவற்றில் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தவது
முதன்மையான நோக்கமல்ல எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு மட்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட போதுமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவது குறித்து விக்னேஸ்வரனும் எவ்வித கருத்துக்களை வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விக்னேஸ்வரனை பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து பேசப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக விக்னேஸ்வரனை நியமிக்கக் கூடாது என எவரேனும் கருதினால், ஏன் நிறுத்தக் கூடாது என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக