ஞாயிறு, 11 மே, 2014

இலங்கையின் அரச நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது......!!!!!!!

இலங்கையின் அரச நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரம் விடுத்த வேண்டுகோளை அடுத்து இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆராய்வதாக தொழில்த்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பல வெற்றிடங்களுக்கு இந்தியர்களை உள்வாங்க முடியும். எனவேதான் அரசாங்கம் இந்தியாவின்
கோரிக்கையை பரிசீலிக்கிறது.

எனினும் உள்ளுர் பணியாளர்களுக்காக இந்திய பணியாளர்களை அமர்த்தப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் சுமார் 3000 வெளிநாட்டவர்கள் சட்டபூர்வமாக பணியாற்றுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக