திங்கள், 12 மே, 2014

பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் தத்தமது பாதுகாப்பை தாமே உறுதிசெய்து கொள்ளும் பரீட்சார்த்த முறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது....!!!!!!


பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் தத்தமது பாதுகாப்பை தாமே உறுதிசெய்து கொள்ளும் பரீட்சார்த்த முறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் பிரகாரம் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிரான தாக்குதல்கள்,அச்சுறுத்தல்கள், கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு பொலிசாரின் உதவியுடன் பொதுமக்கள் தாங்களாகவே நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

இந்த பரீட்சார்த்த திட்டத்திற்கு பருந்து (உகுஸ்ஸா) திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், இத்திட்டத்தின் முதல் கட்டம் நேற்று முதல்
நீர்கொழும்பில் நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும் பொதுமக்களில் ஒரு பிரிவினர் குற்றங்களைத் தடுப்பதற்கு பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்க வேண்டும். மேலும் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான வாகனம் மற்றும் செலவுகளையும் பொதுமக்களும், வர்த்தகர்களுமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதனை ஒருங்கிணைப்பதும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதும் மட்டுமே பொலிசாரின் வேலையாகும். இதற்கென பொலிஸ் நிலையத்தில் தனியான அலுவலரும், பிரத்தியேக தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் குற்றச்செயல்களை பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இதன் காரணமாக வர்த்தகர்கள், பொதுமக்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள அரசாங்கம், இவ்வாறான புதிய திட்டங்களின் மூலம் அவர்களை மேலும் ஆபத்துக்குள் தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக