ஞாயிறு, 11 மே, 2014

மகாராஷ்ராவில் மாவோயிஸ்டுக்கள் நிலக்கண்ணித் தாக்குதல்!!! 7 காவல்துறையினர் பலி

மகாராஷ்ராவில் கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுக்கள் நடத்திய நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் குறைந்தது ஏழு கொமாண்டோ போலிஸ் பலியாகியிருக்கலாம் என அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஞாயிறு காலை 9:40 மணியளவில். பவிமுரந்தா மற்றும் முர்முறை ஆகிய கிராமங்களுக்கு இடையே தாக்குதல் நடவடிக்கைகளுக்காக காடுகளுக்கு இடையே போலிஸ் படை நகர்ந்த போது இத்தாக்குதல் நடவடிக்கை இடம்பெற்றது.

வாகனத்தின் பயணம் செய்த சிறப்புப் போலிசாரின் எண்ணிக்கை உறுதிசெய்யப்படாத காரணத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகவிருக்கலாம் என மற்றொரு அரச தரப்புத் தகவல் தெரிவிக்கின்றது.
காயமடைந்தவர்கள் நாக்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தண்டக்காரண்யா காடுகளில் பல்தேசிய நிறுவனங்களின் கனிமக்கொள்ளைக்காக இன்ச்சுத்திகரிப்புச் செய்யப்படும் பழங்குடி மக்களைப் பாதுகாக்க மாவோயிஸ்டுக்கள் போராடிவருகின்றனர்.
அரச தரப்பு மேலும் தெரிவிக்கையில், கொல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்கள் விசேடமாகப் பயிற்றப்பட்ட நக்சல் எதிர்ப்பு படை எனவும், மகாராஷ்ராவின் மையப்பகுதியில் வைத்து இவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக