
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வினையொட்டி ஆயிரம் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நேற்று இடம்பெற்றபோது அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரும்புகையில் நாவற்குழி சிங்களக் குடியேற்றம் குறித்து ஊடகத்தினர் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டுகளில் வாடகை வீடுகளில் வாழ்ந்த சிங்கள மக்கள் தங்களைக் குடியேற்று மாறுகோரி யாழ்.ரயில் நிலையத்தில் தங்கியிருந்தனர். இந்த மக்களை நானும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சந்தித்து அவர்களின் ஆவணங்களைப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மூன்றுமாத கால அவகாசம் கேட்டிருந்தோம். ஆனால், அதுவரை பொறுத்திராது அந்த மக்கள் தாமாகவே அதில் மீள்குடியேறியுள்ளனர். அவர்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிக்குள் குடியேறியுள்ளதால் அவர்களை அங்கிருந்து அகற்றுவது குறித்து நடவடிக்கைகளை வீடமைப்பு அமைச்சுதான் மேற்கொள்ள வேண்டும். நாவற்குழியில் உள்ள அரச காணிகளில் காணியில்லாத தமிழ் மக்கள் குடியேறலாமா? என்று ஊடகவியலாளர் கேட்டதற்கு, தமிழ் மக்களும் அங்கு குடியேற விரும்பினால் தாராளமாகக் குடியேறலாம். அதற்கு யாரும் தடை விதிக்கப்போவதில்லை. இனங்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்தி மீண்டும் ஒரு யுத்தத்தினை எதிர்கொள்ள இலங்கை தயாராகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக