ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலைச் செய்யக்கோரியும், தற்போது நாட்டில் நிலவிவரும் சர்வாதிகார ஆட்சி முறைமையினை முடிவுகட்ட வேண்டியும் ஆர்ப்பாட்டம் மற்றும் வழிபாடுகளும் நேற்று மேற்கொள்ளப்பட்டன. வழக்கறிஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு நீதிமன்ற வீதியில் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட வேளை, வெள்ளைக்கொடி வழக்கு விசாரணைக்காக நேற்று பிற்பகல் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். இதன்போது அப்பகுதியில் குழுமியிருந்த ஆதரவாளர்கள் சரத் பொன்சேகாவின் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. நீதிமன்ற வீதியில் வைத்து பொன்சேகாவின் வாகனத்தைச் சூழ்ந்து கொண்ட ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதுடன், ஜனாதிபதிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா, ஜனநாயக தேசிய முன்னணி எம்.பிகள், ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிகள், தமிழ் அரசியல் தலைவர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
செவ்வாய், 5 அக்டோபர், 2010
ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலைச் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக