திருகோணமலை தம்பலகமம் பிரதேசத்தில் நேற்றுமாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை ஒன்றின்போது மரமொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 டெட்னேற்றர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகள், ரி56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் உள்ளிட்ட பல உபகரணங்களே இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இதேவேளை நேற்றுமாலை கல்முனைப் பகுதியிலிருந்து ரி56 ரக துப்பாக்கி மற்றும் 1750 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக