பல்கலைக்கழக மாணவர்கள் சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடல்களையோ கூட்டங்களையோ நடத்தக் கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் சொத்துக்களுக்கோ அல்லது பொது சொத்துக்களுக்கோ சேதம் ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. களனி பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மாணவர்கள் ஒன்றுகூடக் கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் குழப்பங்களை விளைவிக்கும் நோக்கில் கூடும் மாணவர்களை அகற்றுமாறு நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. பிரதேசத்தில் குழப்பங்களை ஏற்படுத்த மாணவர்கள் முனைப்பு காட்டுவதாக காவல்துறையினர் செய்த முறைப்பாட்டை நீதவான் ஏற்றுக்கொண்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக