திங்கள், 25 அக்டோபர், 2010

இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும்-சஜித் பிறேமதாச..!

இந்திய இலங்கை உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளும் பரஸ்பர ரீதியாக நன்மைகளை எட்டக் கூடிய வகையில் உறவுகள் வலுப்படுத்திக்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்குபற்றும் நோக்கல் சஜித் பிரேமதாஸ இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூப ராவுடனும் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக