முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் தமக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கும் நிலை உருவாகி உள்ளது. நீண்ட காலத்தின் பின்னர் விசுவமடுக்குளம் ஆழ் மட்டத்துக்கு வற்றியிருப்பதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தமது ஞாபகத்துக்கு எட்டியவரை 1975ம் ஆண்டிலேயே தண்ணீருக்கு தட்டுப்பாடு உண்டாகும் வகையில் இக்குளம் வற்றியிருந்தது. அது தவிர ஏனைய வருடங்களில் குளத்துத் தண்ணீர் வற்றாது இருந்ததால் தோட்ட நிலங்களில் மட்டுமல்லாது வீட்டு வளவுகளிலும் கிணற்று நீரைக் கொண்டு தோட்டம் செய்ய போதுமான தண்ணீர் வீட்டுக் கிணறுகளில் இருப்பதுண்டு. இப்போதைய நிலையில் மீளக்குடியேறச் சென்ற பின்னர் வீட்டுப் பாவனைக்குக் கூட பிரதேச சபை வழங்கும் பௌசர் தண்ணீருக்கே காத்திருக்க வேண்டி வரப்போகிறது என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக