வியாழன், 16 செப்டம்பர், 2010

பேருவளை சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒன்பதுபேர் கைது..!

பேருவளையில் நேற்று புதன்கிழமை பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக்குமிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சமருக்கிடையில் ஏழு வது சிறுவன் பரிதாபகரமான நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸார் உட்பட 9பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகரகம பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலீசுhரும் நான்கு பொதுமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளைக் கோஷ்டியினரை சுற்றிவளைத்துப் பிடிக்கும் நோக்கில் பொலிஸார் அங்கு சென்றபோது பேருவளை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நின்ற கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே துப்பாக்கிச் சமர் ஏற்பட்டுள்ளது. இதன்போது அப்பகுதியில் முக்கரவண்டி ஒன்றினுள்ளிருந்த ஏழு வயதுச் சிறுவனொருவன்மீது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ளன. இந்த நிலையில் பொலிஸார்மீது துப்பாக்கிச் பிரயோகத்தை மேற்கொண்டவாறு அந்தக் கொள்ளைக் கோஷ்டி காரொன்றிலேறி தப்பிச் சென்றுள்ளது. தப்பிச்சென்ற கொள்ளையர்களைப் பிடிக்க விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக