திங்கள், 10 மே, 2010

மனித குரங்கு நடிக்கும் படம்..!!

எம்.சையத் புரொடக்ஷன், சூப்பர் ஸ்டார் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘துருவா’. இப்படத்தின் இயக்குனர் எஸ்.கதிர் நிருபர்களிடம் கூறியதாவது: தாவரவியல் படிக்கும் மாணவர்கள் தங்களது பேராசிரியருடன் மலேசியா காட்டுப்பகுதிக்கு ஆராய்ச்சிக்காக செல்கின்றனர். அங்கு 5 அடி உயரமுள்ள மனித குரங்கு ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்கி இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைகின்றனர். 5 அறிவு படைத்த குரங்குக்கு உள்ள மனிதாபிமானத்துக்கும், 6 அறிவு படைத்த மனிதனுக்குள்ள மனிதாபிமானத்துக்கும் உள்ள வேறுபாட்டை இப்படம் சித்தரிக்கிறது. மலேசியா காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு மிருககாட்சி சாலையில் உள்ள 5 அடி உயர மனித குரங்கு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறது. ஹீரோவாக விவின் நடிக்கிறார். நாசர், கஞ்சா கருப்பு, சந்தானம் உட்பட பலர் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு நடக்கிறது. மைக்கேல் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அமிகோ சுகு இசை அமைக்கிறார். சையத், சு.இளங்கோ தயாரிக்கின்றனர். இவ்வாறு எஸ்.கதிர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக