எதிர்வரும் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் யுத்த வீரர்கள் நினைவு கூறப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உயிர் நீத்த மற்றும் காயமடைந்த படைவீரர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த ஒரு வார காலத்தில் நாட்டின் சகல பாகங்களிலும் படைவீரர்களுக்களுக்கு நன்றி பாராட்டும் நிகழ்வுகள் மாகாண ரீதியில் நடைபெறவுள்ளது. 15ம் திகதி அனுராதபுரத்தில் ஊனமுற்ற படைவீரர்களுக்கான மையமொன்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இராணுவத்தின் சகல படையணிகளும் விசேட மத வழிபாடுகளில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த வெற்றியை கொண்டாடும் விசேட பேரணியொன்று எதிர்வரும் 20ம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக