
தெலுங்கு, மலையாளம், ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான "டான்' தமிழிலும் அதே பெயரில் வெளியாகிறது. இதில் நாகார்ஜுனா, ராகவா லாரனஸ் ஆகியோர் நாயகர்களாகவும் அனுஷ்கா, நிகிதா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். கதை, திரைக்கதை அமைத்துப் படத்தை இயக்கியிருப்பவர் ராகவா லாரனஸ். அனாதைகளான நாயகர்கள் இருவரும் தாங்கள் வாழ்ந்து வரும் பகுதியில் உள்ள அடித்தட்டு மக்களுக்காகப் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வட இந்தியக் கடத்தல் வியாபாரி ஒருவன், இவர்கள் வாழும் பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறான். அவனை எதிர்த்துப் போராடும் நாயகர்கள், மக்களை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை. இதை ஜனரஞ்சக அம்சங்களுடன் விறுவிறுப்பாகக் கூறியிருக்கிறார் இயக்குநர்.தெலுங்குப் படவுலகில் பெரும் வசூல் சாதனை செய்த இந்தப் படத்துக்குப் இசையும் பாடல்களும் பலம். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் ராகவா லாரன்ஸ். ஜூன் மாதம் படம் வெளியாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக