நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டி நிறுவனத்தின் மூலம் மே 6ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இது ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி, அவரது கணவர் போனி கபூர் கூறுகையில், ஸ்ரீதேவி சிறந்த ஓவியர். அவரது படைப்புகள், கிறிஸ்டி நிறுவனத்தால் ஏலம் விடப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் துவக்க விலை ரூ.11 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.22 லட்சத்துக்கு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம் என்றார். தனது படைப்புகள் சர்வதேச ஏலத்தில் பங்கு பெறுவது பதற்றமாக உள்ளது என ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். இந்த ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி, அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என போனி கபூர் தெரிவித்துள்ளார். இந்த அறக்கட்டளைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், சின்னத்திரை நட்சத்திரம் ஓபரா வின்ப்ரே உள்ளிட்ட உலக பிரபலங்கள் உதவி வருகிறார்கள்.
ஞாயிறு, 25 ஏப்ரல், 2010
சர்வதேச ஏலத்தில் பங்கு பெறும் நடிகை ஸ்ரீதேவியின் ஓவியம்..!
நடிகை ஸ்ரீதேவி வரைந்த ஓவியம், உலகப் புகழ் பெற்ற கிறிஸ்டி நிறுவனத்தின் மூலம் மே 6ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இது ரூ.22 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி, அவரது கணவர் போனி கபூர் கூறுகையில், ஸ்ரீதேவி சிறந்த ஓவியர். அவரது படைப்புகள், கிறிஸ்டி நிறுவனத்தால் ஏலம் விடப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் துவக்க விலை ரூ.11 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.22 லட்சத்துக்கு விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம் என்றார். தனது படைப்புகள் சர்வதேச ஏலத்தில் பங்கு பெறுவது பதற்றமாக உள்ளது என ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். இந்த ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி, அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என போனி கபூர் தெரிவித்துள்ளார். இந்த அறக்கட்டளைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், சின்னத்திரை நட்சத்திரம் ஓபரா வின்ப்ரே உள்ளிட்ட உலக பிரபலங்கள் உதவி வருகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக