ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

கமல் சாருடன் சோந்து நடிப்பது ஒரு புதிய அனுபவம் : த்ரிஷா..!

பிரியதர்ஷன் இயக்கத்தில், அக்ஷய் குமார் ஜோடியாக ‘கட்டா மிட்டா’ இந்திப் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. தமிழில், ‘லேசா லேசா’ படத்தில் தன்னை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பதால், பிரியதர்ஷன் எத்தனை நாட்கள் கால்ஷீட் கேட்டாரோ அத்தனை நாட்களும் கொடுத்து விட்டாராம். இதனாலேயே தெலுங்கு படங்களில் நடிக்கவில்லையாம். தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கிறார். ‘யாவரும் கேளீர்’ தலைப்பு மாறுகிறதாம். ‘‘பல படங்களில் கமல் ஜோடியாக நடிக்க அழைப்பு வந்தும் முடியவில்லை. ‘மர்மயோகி’யில் அவருடன் ஒப்பந்தமானேன். தூய தமிழில் எப்படி வசனம் பேச வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார். அப்படிப்பட்ட ஹீரோவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் த்ரிஷா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக