ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

கைதுசெய்த புலிகள் பலரை நாடு கடத்தியுள்ளதாக மலேசியா அறிவிப்பு..!

இலங்கை அரசின் பிடியிலிருந்து தப்பி மலேசியா சென்ற புலிகள் பலரை தாம் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதாக, மலேசிய அரசாங்கம் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பலரை ஆகஸ்ட் 2009ற்கும் மார்ச் 2010ற்குமிடையில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியிருப்பதாகவும் மலேசிய அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக, அந்த நாட்டின் பத்திரிகையான நியூ ஸ்ரெயிட்ஸ் ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக தகவல்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவிருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 37அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மேலதிகமாக 05அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாமெனவும் தெரியவருகிறது. கண்டி மாவட்டத்திற்கு 03அமைச்சுப் பதவிகளும், ஏனைய பகுதிகளுக்கு 02 அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக