எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள் சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பூட்டான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையிலான குழுவை அந்நாட்டு பிரதமர் ஜிக்மி வை தின்லி வரவேற்றுள்ளார்.இதன் போது விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் வீதியோரமாக திரண்ட அந்நாட்டு மக்கள் கொடிகளை அசைத்து வரவேற்றதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானிய பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதுடன் பின்னர் திம்புவிலுள்ள அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.ஜனாதிபதியுடன் அவரது துணைவியார் சிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் இணை செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் பூட்டான் சென்றுள்ளனர்
திங்கள், 26 ஏப்ரல், 2010
ஜனாதிபதிக்கு பூட்டானில் அமோக வரவேற்பு..!!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக