சனி, 24 ஏப்ரல், 2010

வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் தேசிய வீடமைப்பு அதிகாரசபை கடன் திட்டம்..!!

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின்கீழ் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகாரசபை கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்துகிறது. இதன் முதற்கட்டம் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இரண்டாம் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் முகமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மாவட்டக் கிளை அலுவலகங்களை ஸ்தாபிக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக