சனி, 3 ஏப்ரல், 2010

பொன்சேகாவை வைத்திய நிபுணர் பரிசோதனை செய்ததாக இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பது அப்பட்டமான பொய் -அனோமா பொன்சேகா

எனது கணவரின் உடல்நிலை தொடர்ச்சியாக மோசமடைந்து வருகிறது சுவாசிப்பதற்கும் சிரமப்படுகிறார் இராணுவத்தின் விஷேட வைத்திய நிபுணர்களைக் கொண்டு அவரது உடல்நிலை பராமரிக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க வெளியிட்டு வரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். இராணுவப் பேச்சாளர் உண்மைத் தகவல்களை வெளியிடுவதில்லை என ஜெனரல் சரத்பொன்சேகாவின் துணைவி அனோமா பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எனது கணவர் உடலில் துப்பாக்கித் தோட்டாக்கள் இருப்பதால் நோய்கள் வராதவண்ணம் கவனிக்கப்பட வேண்டும் ஆனால் அது தொடர்பில் யாரும் அக்கறை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. நான் எனது கணவரை பார்க்கச் சென்றிருந்த வேளை விஷேட வைத்திய நிபுணரை கொண்டு உடல்நிலை பராமரிக்கப்பட்டதாக சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். அது அப்பட்டமான பொய்யாகும் தனது கணவருக்கு நிபுணத்துவ மருத்துவர்களின் சேவை அவசியப்படுவதாக கோரிக்கை விடுத்த போதிலும் உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல்நிலை தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி பிரத்தியேக வைத்தியர்களை நியமிக்குமாறு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக