ஞாயிறு, 7 மார்ச், 2010

ஐ.தே.முன்னணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் பதவி விலகல் கடிதங்களை வழங்கத் தேவையில்லை - பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க..!

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் பதவி விலகல் கடிதங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சி தாவல்களில் ஈடுபடுவதில்லை என தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதங்களை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களும் இவ்வாறு பதவி விலகல் கடிதங்களை ஒப்படைத்துள்ளனர். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிடும் ஏனைய கட்சிகள் இவ்வாறு பதவி விலகல் கடிதங்களை ஒப்படைக்க வேண்டியது அவசியமில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைமையிடம் ஒப்படைத்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் பல உறுப்பினர்கள் இணைந்துக் கொண்டதன் காரணமாக அதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு பதவி விலகல் கடிதங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக