ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென பெருந்தோட்ட அமைச்சர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். நாட்டை பிளவு படுத்தாது சகல இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு சக்திகளுக்கு துணை போகும் ஐக்கிய தேசியக் கட்சி ஜே.வி.பி மற்றும் ஏனைய சில கட்சிகளுக்கு சிறந்த பாடத்தை புகட்ட எதிர்வரும் பொதுத் தேர்தலை மக்கள் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கம்பளையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொண்டு உலகத்திற்கு எமது ஜனநயாக பலத்தை வெளிக்காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கட்சிக்கு களங்கம் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டியது சகல உறுப்பினர்களினதும் முக்கிய கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக