வன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) மற்றும் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இன்றுமுற்பகல் வவுனியா சுதந்திரபுரம் கிராமத்திற்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது தமது கட்சியின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மக்கள் ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் பொதுமக்கள் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதன்போது கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அத்தியாவசிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் புளொட் தலைவர் உள்ளிட்ட வேட்பாளர்கள் விளக்கமளித்ததுடன், தமது பணிகளைத் தொடர்வதற்கு நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக