வியாழன், 18 பிப்ரவரி, 2010

தனுனவின் தாயாரான அசோக பணம் தொடர்பாக இருவேறு கருத்துக்கள்

ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் தனுனவின் தாயாரான அசோக திலகரட்ணவை கல்சிசை நீதிமன்றில் ஆஜர் செய்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை விளக்க மறியில் வைக்ககோரியபோது அதற்கு அனுமதி மறுத்த நீதவான் அவருக்கு பிணைவழங்கியுள்ளார். தனியார் வங்கியொன்றில் காணப்பட்ட அவருக்கு சொந்தமான லொக்கர் ஒன்றில் இருந்து சுமார் 75 மில்லின் ரூபா பெறுமதியான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பணம் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் வெளிவந்துள்ளது. அவரது வங்கியில் இருந்த பணம் ஜெனரல் பொன்சேகாவிற்கு சொந்தமான பணம் எனக் அரச தரப்பால் கூறப்படுகின்றது. மறுபுறத்தில் அப்பணம் ஜெனரல் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு கிடைத்த நன்கொடைகள் எனவும் அதற்கான சகல ஆதாரங்களையும் பொன்சேகாவின் வக்கீல்கள் நீதிமன்றுக்கு சமர்ப்பித்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக