இலங்கை வந்த ஆஸ்ட்ரேலியாவின் சிறப்பு பிரதிநிதியான ஜோன் மெக்ராத், அதிபர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். இலங்கை நாட்டவர்கள் சட்ட விரோதமாக ஆஸ்ட்ரேலியாவுக்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இருவரும் முக்கியமாக விவாதித்ததாக அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது இலங்கைக்கான ஆஸ்ட்ரேலிய தூதரக அதிகாரி கதே கே குளுக்மென், துணை தூதுவர் சோபியா மெசின்ரிர் மற்றும் அயலுறவ்யுத் துறை அமைச்சக செயலாளர் ரமேஷ் ஜெயசிங்க உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.ஆஸ்ட்ரேலிய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜோன் மெக்ராத், அரசு உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வியாழன், 25 பிப்ரவரி, 2010
சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் தொடர்பாக ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதிநிதி் பேச்சு..!
இலங்கை வந்த ஆஸ்ட்ரேலியாவின் சிறப்பு பிரதிநிதியான ஜோன் மெக்ராத், அதிபர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார். இலங்கை நாட்டவர்கள் சட்ட விரோதமாக ஆஸ்ட்ரேலியாவுக்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இருவரும் முக்கியமாக விவாதித்ததாக அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது இலங்கைக்கான ஆஸ்ட்ரேலிய தூதரக அதிகாரி கதே கே குளுக்மென், துணை தூதுவர் சோபியா மெசின்ரிர் மற்றும் அயலுறவ்யுத் துறை அமைச்சக செயலாளர் ரமேஷ் ஜெயசிங்க உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.ஆஸ்ட்ரேலிய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜோன் மெக்ராத், அரசு உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக