தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சவாலான முறையில் நாம் இந்த தேர்தலில் சுயேற்சையாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம் என்று வன்னி மாவட்ட சுயேற்சைக் குழுவின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் வன்னி மாவட்ட ஈபிஆர்எல்எவ் முன்னாள் எம்பியுமாகிய இராசு குகனேஸ்வரன் தெரிவித்துள்ளார். வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுடைய சுயமான மீள்குடியேற்றம் அதுமட்டுமல்ல அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகளை வழங்கப்படவேண்டும் இந்த விடயத்தை முன்னுரிமைப்படுத்தி தேர்தலின் போட்டியி;ட முன்வந்துள்ளோம். வன்னி மாவட்ட மக்களுடைய தேவைகளை இயன்றளவு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்பதும் எமது நிலைப்பாடுகளில் ஒன்றாகும் என குறிப்பிட்ட திரு குகனேஸ்வரன், நாங்கள் எந்த தேசிய கட்சியையும் சாராதவர்கள் மக்களுடைய தேவை கருதி ஆட்சிக்கு வருபவர்களுடனும், எதிரணியினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனுவை தாக்கல் செய்தபின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார். அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் என்ற கருத்தில் தமக்கு எந்தவிதமாறுபட்ட கருத்துக்களுக்கும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக