புதன், 24 பிப்ரவரி, 2010

இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருமலை, மட்டக்களப்பு வேட்புமனுத் தாக்கல்..!

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. இதன்படி திருமலை மாவட்டத்திற்கான வேட்புமனுவை மாவட்டக்குழு தலைவர் இரா.சம்பந்தன், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி காரியாலயத்தில் தாக்கல் செய்தார். திருமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக இரா.சம்பந்தன், சீ.மதியழகன், கே.நடேசப்பிள்ளை, கே.நாகேஸ்வரன், கே.திருச்செல்வம், செல்வராஜா மற்றும் நேமிநாதன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்புமனு மாவட்டத் தலைவர் செல்வராஜா தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வன்னியில் அடைக்கலநாதன் செல்வம் தலைமையிலான குழுவினர் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். யாழ் மாவட்டத்திற்கான வேட்புமனு மாவை சேனாதிராஜா தலைமையில் இன்றுமுற்பகல் தாக்கல் செய்யப்ப்டது. இதன்பிரகாரம் யாழ். மாவட்டத்தில் மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஆறுமுகம் கந்தையா, பிறேமச்சந்திரன், கந்தையா சிவஞானம், சூசைப்பிள்ளை, பிரிமியர் குலநாயகம், ஆறுமுகம் ராஜேந்திரன், கந்தையா அருந்தவம், சிவஞானம் சிறீதரன், ஈஸ்வரபாதம் சரவணபவான், இராசேந்திரன் ஐங்கரநேசன், பொன்னுத்துரை, முடியப்பு ரேமிஜியஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக