வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

ஈ.பி.டி.பி யாழ்ப்பாணத்தில் அரசுடன் இணைந்தும் வன்னி திருமலையில் தனித்தும் போட்டி..!

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதனடிப்படையில் அந்தக் கட்சியின் தலைமை வேட்பாளராக அமைச்சரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் போட்டியிடுகின்றார். அதன்கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், உதயன், ஸ்ரீரங்கேஸ்வரன், கமலேந்திரன், சார்ள்ஸ், சீவரட்ணம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஈ.பி.டீ.பி கட்சியின் சார்பில் எட்டு வேட்பாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் மூன்று பேரும் யாழ்ப்பாணத்தில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதேவேளை ஈ.பி.டி.பியானது வன்னியில் தமது கட்சியின் வீணைச்சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. அங்கு அந்தக் கட்சி ஒன்பது பேரைக்கொண்ட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது. வேற்றிலையா? வீணையா?? என்பதில் (சின்னத்தில்) ஓர் தெளிவான முடிவை எடுக்க முடியாத சூழ்நிலையில் அரசின் அழுத்தங்கள் கடந்த சில நாட்களாக அரசுடன் நடைபெற்ற பேரம்பேசலின் அடிப்படையில் யாழில் ஏற்கனவே எதிர்பார்த்தபடியே ஈபிடிபி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது இது இவர்களின் கையாலாகத்தனத்தையே வெளிப்படுத்துவதாக மற்றுமோர் யாழ் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக