தேர்தல் பிரச்சாரங்களுக்காக காரியாலயங்களை இன்று நள்ளிரவுக்குள் அகற்ற வேண்டுமென பொலீஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய சகல கட்சிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு பிரச்சாரக் காரியாலயங்கள் அகற்றப்படாத பட்சத்தில் பொலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பரெனவும் அவர் எச்சரித்துள்ளார். அத்துடன் பிரச்சாரக் காரியாலயங்களை அகற்றத் தவறுவோருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட 9ஆயிரத்து 294தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 6031தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும், புதிய ஜனநாயக முன்னணியின் 1831தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும், ஐ.தே.கட்சியின் 862தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும், ஜே.வி.பியின் 117தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும் பதிவு செய்யப்பட்டு இயங்கிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களை இன்று நள்ளிரவுக்குள் அகற்ற வேண்டுமென பொலீஸ் மாஅதிபர் அறிவுறுத்தல்..!!
தேர்தல் பிரச்சாரங்களுக்காக காரியாலயங்களை இன்று நள்ளிரவுக்குள் அகற்ற வேண்டுமென பொலீஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய சகல கட்சிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இவ்வாறு பிரச்சாரக் காரியாலயங்கள் அகற்றப்படாத பட்சத்தில் பொலீசார் கடுமையான நடவடிக்கை எடுப்பரெனவும் அவர் எச்சரித்துள்ளார். அத்துடன் பிரச்சாரக் காரியாலயங்களை அகற்றத் தவறுவோருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட 9ஆயிரத்து 294தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 6031தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும், புதிய ஜனநாயக முன்னணியின் 1831தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும், ஐ.தே.கட்சியின் 862தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும், ஜே.வி.பியின் 117தேர்தல் பிரச்சாரக் காரியாலயங்களும் பதிவு செய்யப்பட்டு இயங்கிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக