
ஜனவரி மாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலுக்கான பிரச்சாரம் குடாநாட்டில் சூடுபிடித்துள்ளது இதனையடுத்து ஜனாதிபதிக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும் நேற்று யாழ்ப்பாணத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் யாழ் வந்துள்ள இவருடன் இலங்கை சுதந்திரக்கட்சியின் வன்னி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திலக்குமார உடுகமவும் வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன நேற்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இராணுத்தால் கைது செய்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுபவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரும் ஆவலுடன் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் யாழ்குடாநாட்டில் மகளிர் அமைப்புகளே மேற்படி கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக