சனி, 2 ஜனவரி, 2010

புதிய பாதை| சுந்தரம் - புலிகளின் முதலாவது பகிரங்க அரசியல் படுகொலை..!!

02-01-2006 திகதியுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைக்கழகத்தின் ஆரம்பகால தமிழீழ தேசிய விடுதலைப்போராளி, ~புதிய பாதை ஆசிரியர் சுந்தரம் என்கின்ற சிவசண்முகமூர்த்தி தமிழீழ விடுதலைப்புலிகளால் கொலைசெய்யப்பட்டு 24 வருடங்களாகின்றன. 02-01-1982 இல் இவர் கொலைசெய்யப்பட முன்னர், பற்குணம் மற்றும் மைக்கேல் போன்றவர்கள் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகால தலைமறைவுச்சூழலில் கொல்லப்பட்டாலும் சுந்தரத்தின் கொலையின் பின்னரே ~புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பித்தது. அதாவது தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொள்ளும் குழுக்களிலொன்று, தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடும் ஏனைய குழுக்களை ~எதிரிகளாக பகிங்கரமாக பிரகடனப்படுத்தியது அரசியல் படுகொலைகளை ஏகபோகமாக்கியது. தமிழீழ விடுதலைக்கழகத்தின் அரசியல் தத்துவார்த்த ஏடான ~புதிய பாதை யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தினுள் பதிப்பாவதையும், அதனது ஆசிரியரான சுந்தரம் அச்சக அலுவல்களை நிர்வகித்து வருவதினையும், தமிழீழ விடுதலைப்புலிகள் முன்கூட்டியே தெரிந்துவைத்திருந்தனர். அன்றைய யாழ்நகரத்தின் நெரிசல் நிறைந்த தெருக்களில் சாதாரண மனிதனாய் நடந்து சித்திரா அச்சகத்தினுள் நுழைவதை கொலையாளிகள் அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சுந்தரம் அறிந்திருக்கவில்லை. சித்திரா அச்சகத்தினுள்ளேவந்த சுந்தரம் கதிரையொன்றில் அமர்ந்திருந்த சற்றுநேரத்தில், அவர்மீது பின்னாலிருந்து கொலையாளிகள் வேட்டுக்களைத் தீர்த்தனர்;. தனது மரணத்தின் இறுதிக்கணங்களை நிதானிப்பதற்கு முன்னரே அக்கதிரையில் சுந்தரத்தின் உயிர் பிரிந்தது. முதன்முதலாக பகிங்கரமாக நிகழ்ந்த இந்த அரசியல் கொலையின் பின்னர் தொடரவிருக்கும் கொலைகளின் எண்ணிக்கை எவ்வளவாகவிருக்குமென்பது அன்று தமிழ் மக்களில் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. சுந்தரத்தைக் கொலைசெய்த பின்னர் மிகவும் இறுமாப்பாக ~துரோகத்தின் பரிசு என்று தலைப்பிட்ட துண்டுபிரசுமொன்றினூடாக தமிழீழ விடுதலைப்புலிகள் உரிமை கோரினர். தமிழீழ விடுதலைக்கழகம் தம்மீது பகிரங்கமாக நிகழ்த்தப்பட்ட கொலையினை தமது அரசியல் போராட்டத்துடன் இணைக்கவில்லை. 1980களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து வேலைசெய்து தற்போது ஒதுங்கியிருக்கும் பலர் அப்போது சுந்தரத்தின் கொலையை நியாயப்படுத்தியிருந்தனர் என்பதையும் இங்கு நினைவுபடுத்தவேண்டும். இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணமிக்கும்பொழுதே மாற்றுக்கருத்துக்கொண்ட ஏனைய தமிழ் தேசிய விடுதலையியக்கத்தினரை அழித்தொழித்தல் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூலாதாரக்கொள்கைகளில் ஒன்றாகிவிட்டதென்பதற்கு 1982 இல் சுந்தரம் தொடக்கம், 26-12-2005 இல் வவுனியா இறைம்பக்குளத்தில் கொலை செய்யப்பட்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட அரசியல் அமைப்பாளர் திருப்பதி மாஸ்டர்வரை சான்றாக உள்ளன. ஒடுக்கப்படும் இனத்தின் சார்பாக போராட முன்வருபவர்கள் ஒரே சமூக அடித்தளத்தைக் கொண்டவர்களல்ல@ வௌ;வேறான வர்க்கத்தினராய் வௌ;வேறான வர்க்கப்பார்வையுடைவர்களாக இருக்கலாம். இவ்வாறானவர்களை ஐக்கியப்படுத்தி தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக, ஓர் இயக்கம், ஒரு தலைவன் என்ற சர்வாதிகார முழக்கத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கையெனப்பிரகடனம் செய்து சுந்தரத்திலிருந்து திருப்பதி மாஸ்டர்வரை அமுல்படுத்தி வருகின்றனர். தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தினை வெறுமனே சிங்கள பௌத்த இனவாதப்பிடியிலிருந்து இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் வாழும் மக்களின் அதிகாரத்தை தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்மாத்திரமே கைப்பற்றவேண்டுமென்று குறுக்கினர். ஒடுக்குமுறையொன்றினை எதித்துப் போராடும் ஓர் இயக்கம், அதே ஒடுக்குமுறையினை எதித்து போராடும் இன்னோர் இயக்கமொன்றின் போராளிகளைக் கொலைசெய்வதென்பதை எல்லாவழிமுறைகளைகளையும் கையாண்டு எதிர்க்கப்படவேண்டுமென்பதை 1982களில் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்தில் முனைப்பாக செயற்பட்ட பெரும்பாலான தேசிய விடுதலை இயக்கங்களும், தமிழ் பேசும் மக்களும் உணரத்தவறிவிட்டனர். இந்தத்தவறுதான் இறைகுமாரன், உமைகுமாரன், ஒபராய் தேவன், ஜெகன், மனோ மாஸடர் 1986இல் தமிழீழ விடுதலையியக்கத்தின் 300 போராளிகள் அதன் பின்னர்; அனைத்து அமைப்புகளின் போராளிகளின் கொலைகளுக்கு வித்திட்டது. இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு பாசிச அமைப்பாக உருவாக வழிவகுத்தமைக்கு இந்தத்தவறு மிகமுக்கியமான காரணங்களிலொன்றாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அராஜகங்களை வன்மையாக எதிர்த்துப்போராடவேண்டுமென்ற எண்ணங்கொண்டவர்கள், 24 வருடங்களின் பின்னராவது இந்தத்தவறினை முற்றுமுழுதாக உணர்ந்து கொண்டவர்களாகவும் இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் என்பது ஒரு மக்கள் விரோத அமைப்பென்ற திட்டவட்டமான கருத்து இன்னமும் தமிழ் பேசும் மக்களிடையே ஆழமாக வேரூன்றவில்லை. இதனால்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் பல ஆயிரக்கணக்கான ஏனைய இயக்க தமிழ்ப்போராளிகளை, ஆதரவாளர்களை சமூக விரோதிகளென்றும் அரசாங்க துணைப்படையினரென்றும் கொன்றுகுவித்தும் தமிழ் பேசும் மக்களால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்படாதவர்களாக இருக்கிறார்கள். இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்தினால் கொல்லப்பட்ட தமிழ் பேசும் மக்களை பட்டியற்படுத்தும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புகள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைபற்றி வாய்திறந்தும் கதைப்பதில்லை. இதற்கு அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம். பலவிதமான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இந்த இக்கட்டான காலகட்டத்தில், ஜனநாயக சக்திகள் தமிழீழ விடுதலைப்புலிகளாலும் ஏனைய இயக்கங்களாலும் கொல்லப்பட்ட தமிழ் பேசும் மக்களின் விபரங்களை துல்லியமாக சேகரிப்பதிலும் முழுக்கவனம் செலுத்தவேண்டும். அரசியல் படுகொலைகளை நினைவுகூருவதற்கு ஜனநாயக சக்திகள் பொருத்தமான நாளொன்றினையும் பிரகடனப்படுத்தவேண்டும்.
நன்றி தேனீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக