
மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீதா பிரபாகரனின் உத்தியோகபூர்வ இல்லத்தின்மீது நேற்று சிலர் கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இக் குண்டுவீச்சு சம்பவத்தினால் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவு மற்றும் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன. இதேபோன்று மேயருக்கு சொந்தமான வீடு மற்றும் அவரின் கணவனின் வர்த்தகநிலையம் என்பனவும் நேற்று உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் இடம்பெற்றபோது மேயர் சிவகீதாவோ அல்லது அவரின் குடும்பமோ அங்கு தங்கியிருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபை மேயர் திருமதி சிவகீதா ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரித்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவராவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக