கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த புத்தளம் மன்னார்வீதி இன்று மீண்டும் பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வீதியை மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ச ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். குறித்த வீதி 105கிலோமீற்றர் வரையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தளத்திலிருந்து மன்னாருக்கும், மன்னாரிலிருந்து புத்தளத்திற்குமான போக்குவரத்துக்களில் நேர சிக்கனம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக