சனி, 12 டிசம்பர், 2009

உருத்திரகுமாரனைக் கைதுசெய்யக்கூடிய ஆதாரங்களை அமெரிக்காவுடன் பகிரத் தயாரென அரசாங்கம் தெரிவிப்பு !

புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனைக் கைதுசெய்வதற்கான ஆதாரங்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராகவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதனிடம் (கே.பி) மேற்கொண்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் உருத்திரகுமாரனுக்கும் புலிகளுக்குமிடையிலான தொடர்புகள் குறித்து ஆதாரங்களை திரட்டி வருவதாக பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இந்நிலையில் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் எவ்வித குற்றச்செயல்களுடனும் தொடர்புபடாத நிலையில் அவரை அங்கு கைதுசெய்ய முடியாதென தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேர்ட் ஓ பிளெக் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் அவரை அங்கு கைதுசெய்வதற்கான போதிய ஆதாரங்கள் இலங்கையிடம் இருப்பதாகவும், தேவைப்படும் பட்சத்தில் அவற்றை அமெரிக்காவுடன் பகிர இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக