சனி, 12 டிசம்பர், 2009

அநுராதபுரம் மற்றும் வவுனியா சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு !

அநுராதபுரம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலைகளின் கைதிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவசரகால சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகளே இப்போராட்டத்தினை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளுக்கு வழங்கிய உறுதிமொழியையடுத்தே உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக சிறைச்சாலையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக