செவ்வாய், 15 டிசம்பர், 2009

பொன்சேகாவிற்கு இரகசியத்தை வெளியிட்ட குற்றத்திற்காக சிறைத்தண்டனை வழங்க முடியும் -சட்டத்தரணி காலிங்க

அரசாங்க ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு சிறைத்தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும் என அரச சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க ரகசிய சட்டமூலத்தின் கீழ் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்செயலுக்காக ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு 14ஆண்டுகால சிறைத்தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டபோர் தொடர்பில் ஜெனரல் சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமெனக் குறிப்பிட்டுள்ளார். ஊடக அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டு;ள்ளார். இதேவேளை ஜெனரல் சரத்பொன்சேகாவின் கூற்றின் காரணமாக சர்வதேச யுத்தநீதிமன்றில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்படும் என மற்றுமொரு அரச சட்டத்தரணி கொமின் ஜயசிறி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக