செவ்வாய், 8 டிசம்பர், 2009

புலிகளிடமிருந்து பெறப்படும் சொத்துக்கள் யாவும் நாட்டின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்படுமென அரசு அறிவிப்பு !

புலிகளிடமிருந்து பெறப்படும் சொத்துக்கள் அனைத்தும் நாட்டின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு சர்வதேச ரீதியில் இருக்கும் சொத்துக்களின் விபரங்களை அறிவதற்கு உளவுப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட சொத்துக்கள், நகைகள், கப்பல்கள் என்பன தொடர்பாக அரசாங்கம் தகவல் வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதமர் கொறடா ஜோசெப் மைக்கல் பெரேரா கேள்வி எழுப்பியதையடுத்தே பிரதமர் இப்பதிலை அளித்துள்ளார். புலிகளின் மொத்த சொத்துக்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதோடு, அவை நாட்டின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்படுமென்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார். அத்துடன் புலிகளின் சொத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் குறித்த தகவல்களை தற்போது வெளியிட முடியாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக