செவ்வாய், 15 டிசம்பர், 2009

இலங்கை அகதிகள் போலித் தரகர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் -மலேசிய அரசாங்கம்

இலங்கை அகதிகள் போலித் தரகர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென மலேசிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வேறும் நாடுகளுக்கு அனுப்பிவைப்பதாகத் தெரிவித்து அனேக இலங்கையர்கள் மலேசியாவிற்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறு மலேசியாவில் புகலிடம்கோரும் இலங்கையர்களில் பெரும்பாலானோர் போலி முகவர்களினால் ஏமாற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. வேறும் நாடுகளுக்கு செல்லும் நோக்கில் பல இலங்கையாகள் சட்டவிரோதமான முறையில் மலேசியாவை சென்றடைவதாகக் குறிப்பிடப்படுகிறது. அவுஸ்திரேலியா நியூசிலாந்து கனடா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து போலிமுகவர்கள் இலங்கை அகதிகளை ஏமாற்றுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு வேறு நாடுகளுக்குச் செல்லும் நோக்கில் வரும் இலங்கையர்களிடம் பெருந்தொகைப் பணம் அறவிடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தூதுவராலயங்கள்இ ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு தங்களது நிலைமைகளை அறிந்துகொள்ளுமாறு மலேசியாவில் சரணாகதி அடைந்துள்ள இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக