
மகாவிஷ்ணு எடுத்த 9வது அவதாரம்தான் கிருஷ்ணர். பூமியில் கிருஷ்ணராக மகா விஷ்ணு பிறப்பெடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களால் இது அழைக்கப்படுகிறது.கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் விசேஷமாக உள்ளன.பள்ளிகள், கல்லூரிகளில் பிரமாண்ட கிருஷ்ணர் படங்கள், மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களை படங்களாக வரைதல், உறியடி விழா நடத்துதல் பூமியில் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை மிக உயர்ந்த தர்மம் என்னும் தத்துவத்தை பகவத் கீதை மூலம் உபதேசித்த கிருஷ்ணன் பிறந்த நாளில் இந்த உலகம் உயர்வடைய அனைவரும் பிரார்த்திப்போம்.மனிதன் மனிதனாக மட்டுமல்லாமல் மற்ற மனிதனுக்காகவும் வாழ வேண்டும் என்ற உன்னத தத்துவதை நமக்கு அருளிய நலம் தரும் நாராயணன் அருளால் அனைவரது வாழ்க்கையும் சிறக்கட்டும். இருள் மறைந்து ஒளி மலரட்டும். எங்கெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள ஜனநாயகம் மலரட்டும் என மனமார வாழ்த்துகிறேன்
Hi, it's a great blog.
பதிலளிநீக்குI could tell how much efforts you've taken on it.
Keep doing!