
நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் குடியகல்வுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபனமும் இணைந்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனருத்தாரனம் செய்யும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. ஜப்பான் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியன இந்த திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளன. இதற்கு மேலதிகமாக ஏராளமான தன்னார்வ அமைப்புக்களின் உதவிகளும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த புனருத்தாரன பணிகளுக்காக 2கோடி 30லட்சம் அமெரிக்க டொலர்கள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முன்னாள் புலி உறுப்பினர்களை புனருத்தாபனம் செய்து சமூகத்தின் நற்பிரஜைகளாக அவர்களை மாற்றுவதே இதன் நோக்கமென நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Leave a Comment
Leave a Comment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக