பதவி விலக வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இலங்கை அரசாங்கமும் கோரி வருகின்ற நிலையில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தொடர்ந்தும் தமது பதவியை நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசரின் பேச்சாளர் இதனை அறிவித்துள்ளார்.
தம்மை பிரதம நீதியரசரின் பேச்சாளர் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் சட்டத்தரணியான விஜேரத்ன கொடிபிலி இதனை அறிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கைகளால் பிரதம நீதியரசர் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரதம நீதியரசரின் பேச்சாளர் என்று கூறிக் கொள்ளும் சட்டத்தரணி, சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையில்
பணியாற்றிய பின்னர் அதில் இருந்து தப்பிச் சென்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் இலங்கை கடற்படையின் தப்பிச்சென்ற வீரர்கள் பட்டியலில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக