நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு, தனது முழுமையான ஆதரவு வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.
நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு இன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்புக்கு, முன்னாள் ஜனாதிபதி அனுப்பியிருந்த விசேட செய்தியில் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகார முறை என்பது அந்த அதிகாரங்களை கையாளும் நபருக்கு அமைய நன்மையானதாக அல்லது தீமையானதாக மாறக் கூடும் எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை தெரிவு செய்யும் அதேவேளை அந்த தேர்தலை சுதந்திரமாகவும்
நேர்மையாகவும் நடத்த எதிர்க்கட்சிகள் போராட வேண்டும் என இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக