வியாழன், 13 நவம்பர், 2014

வடக்கின் புத்தர் சிலைகளை உடைத்து எறிய காத்திருக்கின்றனர் விமல்..!!!

அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து சம்பளம் பெற்றுக் கொள்வோர் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடத்தப்பட்ட கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் புத்தர் சிலைகளை உடைத்து எறிய நேரம் பார்த்து காத்திருக்கின்றனர். நாட்டில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று தேவை கடுமையாக எழுந்துள்ளது.

மக்கள் நலனை உறுதிப்படுத்தக் கூடிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.


பௌத்த சங்க நாயக்கர்களின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை இன்னமும் கண்டு பிடிக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைவர் பதவி பறிபோய்விடும் என்று ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரியும்.

வெற்றியீட்ட முடியாத பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிடச் செய்வதே ரணிலின் நோக்கமாகும்.

தேர்தலில் வெற்றியீட்ட முடியாது எனத் தெரிந்து கொண்ட ஜே.வி.பி. மஹிந்தவிற்கு மூன்று தடவை முடியாது என கோசம் எழுப்புகின்றது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக