எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் அல்லது சஜித் போட்டியிட வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் நேற்று மாலை அவரை சந்திக்க வந்திருந்த கட்சி முக்கியஸ்தர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டே ஆகவேண்டும்.
அது நானாகவும் இருக்கலாம். அல்லது நான் போட்டியிட முடியாத பட்சத்தில் சஜித் பிரேமதாச போட்டியிடுவார். அதனைத் தவிர பொது வேட்பாளர் என்ற கருத்துடன் உடன்படவில்லை என்றும் ரணில் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் ஜனாதிபதித் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இதுவரை முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக