திங்கள், 3 நவம்பர், 2014

ஜனாதிபதி தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் (பொது) சிராணி பண்டாரநாயக்க..!!

ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னாள் பொதுவேட்பாளர் என்ற நிலைக்கு பிரேரிக்கப்பட்டிருந்த மாதுலுவாவே சோபித்த தேரர் இதற்கான முனைப்பை மேற்கொண்டு வருகிறார்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் விடுத்தவேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முனைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது வேட்பாளராக சிராணி பண்டாரநாயக்க போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக