சிறுவர் மத்தியில் போசாக்கின்மை அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று மூன்று பிள்ளைகளில் ஒருவருக்கு மந்த போசனை நிலவுகின்றது. கம்பஹா மாவட்டத்தில் அதிகளவானவர்கள் மந்த போசாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை முழுவதிலும் மூன்றில் ஒரு குழந்தை மந்த போசாக்கு காணப்படுகின்றது.
இவ்வாறான ஓர் நிலைமையில் நாட்டில் மந்த போசனை குறைந்துள்ளதாகத் தெரிவித்து ஆளும் கட்சி மக்களை பிழையாக வழிநடத்தக் கூடாது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சிறுவர்கள் மீது 32000 குற்றச் செயல்களும், பெண்கள் மீது 36000 குற்றச் செயல்களும் இடம்பெற்றுள்ளன.
மாகாண சபைகளில் ஐந்து வீதமான பெண்களே அங்கம் வகிக்கின்றனர். நாடாளுமன்றில் 11 பெண்களே அங்கம் வகிக்கின்றனர் என ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக