வியாழன், 26 ஜூன், 2014

அளுத்கம சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டும்...!!!!

அளுத்கம சம்பவம் தொடாபில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டுமென மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி கோரியுள்ளார்.
அளுத்கம பிரதேசத்தில் வன்முறைகள் இடம்பெறக்கூடுமென இரண்டு மாதங்களுக்கு முன்னதாக எச்சரித்தேன். குறுஞ்செய்தி தொடர்பிலும் குறிப்பிட்டேன்.

அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தெரிவித்தார்.

அளுத்கம சம்பவம் தொடர்பில் காணொளிகள் காணப்படுகின்றன.   அவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பார்வையிட வேண்டும்.

பக்கச்சார்பற்ற வகையில் விசாரணை நடாத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தராதரம் பாராது தண்டனை விதிக்கப்பட வேண்டும்.


தராதரம் பாராது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் ஜனாதிபதி ருவிட்டரில் தெரிவித்தார். எனினும், இதுவரையில் ஒருவரைக் கூட கைது செய்ய முடியவில்லை.

சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக அசாத் சாலி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக