வியாழன், 5 ஜூன், 2014

இன்று உலக சுற்றாடல் தினம்...!!!

உலக சுற்றாடல் தினம் இன்றாகும். (05) இத்தினம் உலகளாவிய ரீதியில் வெகு சிறப்பாகக் கொண்டா டப்படுகின்றது. இயற்கை அனர்த்தங்கள் ஒவ்வொன்றும் உலகில் ஏற்படும் சூழலியல் மாற்றங்களை எமக்கு தெளிவுபடுத்துகிறது.

1972 இல் சுவீடனின் தலைநகரான ஸ்டெக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள் அதன் பிரயோகம் பற்றி கலந்துரையாடப்பட்டன. இதில் மனிதனுக்கும் சூழலுக்கு மிடையே உள்ள தொடர்பு பற்றி ஆராயப்பட்டது.

உலகமயமாக்கல் என்ற போர்வையின் கீழ் சூழலை மாசடையச் செய்வதிலும் அதிகளவு இயற்கை வளங்களை சர்வநாசம் செய்வதிலும் ஈடுபடுவது மனிதனே என்று கண்டறியப்பட்டுள்ளது.


இறுதியில் ஜூன் 5ஆம் திகதியை உலக சுற்றாடல் (World Environment Day) தினமாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுத்தி வருகின்றது. எமது நாட்டில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, ஜனாதிபதி செயலகம் இலங்கை விஞ்ஞான, கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவனம் சுற்றாடல் சம்பந்தமான உறுதியான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக