இணையத்தில் பாடசாலைகளின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படும் செய்திகளை, நாம் வெளியிடுவதில்லையென எமது பூர்வீகம் இணையத்தின் பிரதம ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
03/06/2014.
எமது பிரதேச பாடசாலைகளின் பெயர் குறிப்பிடப்பட்டு எந்த செய்திகளும் பாடசாலைகளுக்கு எதிராக நாம் வெளியிடுவதில்லை. பூர்வீகம் இணையம் பாடசாலைகளின் ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கும், பொதுவான சமூக நிகழ்வுகளையும் சுட்டிகாட்டுவதில் தயங்குவதில்லை.
எம்மால் வெளியிடப்படும் செய்திகள் பொதுவான தலைப்புகளுடன் மட்டுமே வெளிவரும், யாரையும் தாக்கும் நோக்கமோ அல்லது பாடசாலையின் பெயர் குறிப்பிட்டோ இதுவரை எமது இணையம் எந்த செய்திகளையும் வெளியிட்டதில்லை. எமது இணையத்துக்கு பல ஆதாரங்களுடனான செய்திகள் கிடைத்தும் இன்னும் நாம் எந்த பாடசாலையையும் பெயர் குறிப்பிட்டு வெளியிட்டதில்லை.
பாடசாலைகளின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் அல்லது செய்திகளையும் நாம் ஒருபோதும் பிரசுரிக்க மாட்டோம். பொதுவான செய்திகளை வெளியிடுவதன் நோக்கம் குறிப்பிட்டவர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுவான தலைப்புகளில் எமது பூர்வீகம் இணையம் செய்திகளை வெளியிடும்.
நன்றி
பிரதம ஆசிரியர்,
பூர்வீகம் செய்திகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக